Breaking News

மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் அணிவகுப்பு மரியாதையும்,பரிசோதனையும்


மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் அணிவகுப்பு மரியாதையும்,பரிசோதனையும்



யாழ் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் 2026 ஆண்டிற்கான அணிவகுப்பு மரியாதையும் பரிசோதனையும் மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் இன்று(25) இடம்பெற்றது.


மருதங்கேணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கெலும் பண்டார தலைமையில் காலை 7.30 மணியளவில் பொலிஸ் நிலைய வளாகத்தில் ஆரம்பமான நிகழ்வில் காங்கேஷன்துறைக்கு பொறுப்பாக இருக்கும் பொலீஸ் அத்தியட்சகர் (ssp)

  அணிவகுப்பில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டு ஏற்றுக் கொண்டார்.


மேலும் பொலிசாரால் பொது மக்களுக்கு வழங்கப்படும் பொலிஸ் சேவைப்பிரிவு நிலையங்கள் சுற்றுச்சூழல் பொலிஸ் உத்தியோகத்தர்களின் தங்குமிட அறைகள் , அலுவலகங்கள் என்பவற்றை பார்வையிட்டதுடன் பொலிஸார் பயன்படுத்தும் வாகனங்களையும் பரிசோதனை மேற்கொண்டார்.


மேலும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் சுகாதார முறைகள் பொலிஸ் நிலையத்திலுள்ள பௌதீக வள பற்றாக்குறை தொடர்பிலும் ஆராய்ந்தார்.


இறுதியாக பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான வழிப்படுத்தல் வகுப்பும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.