நடுக்கடலில் பரபரப்பு-காரைக்கால் மீனவர்களை சிறைப்பிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள்
நடுக்கடலில் பரபரப்பு-காரைக்கால் மீனவர்களை சிறைப்பிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள்
தனுஷ்கோடி கடற்பரப்பில் இரவு பகலாக தங்கி காரைக்கால் பகுதி மீனவர்கள் மீன் பிடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் தனுஷ்கோடி அருகே பாக் ஜலசந்தி கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த காரைக்கால் மீனவர்களை படகுடன் இரண்டாவது முறையாக சிறை பிடித்து ராமேஸ்வரம் மீன் பிடித்துறை முகத்திற்கு அழைத்து வந்தனர்.
ராமநாதபுரம், தஞ்சை, புதுக்கோட்டை, மாவட்ட மீனவர்கள் வாரத்தில் மூன்று நாட்களும், நாட்டு படகுகள் நான்கு நாட்களும் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த மீன்பிடி விசைப் படகுகள் கடலில் 10 முதல் 15 நாட்கள் தங்கி மீன் பிடியில் ஈடுபட்டு வருவதால் தஞ்சை, ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்ட மீனவர்களின் வாழ்வாதார பாதிக்கப்படுவதுடன் காரைக்கால் பகுதி மீனவர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் சென்று கரையோரம் மீன்பிடியில் ஈடுபடுவதுடன், இலங்கை மீனவர்களின் உடமைகளை சேதப்படுத்தால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இலங்கை கடற்படையின் ஊடாக தமிழக மீனவர்களை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனால் காரைக்கால் பகுதி மீனவர்கள் பாக் ஜலசந்தி, தனுஷ்கோடி கடற்பரப்பில் மீன் பிடிக்க கூடாது, என கடந்த மாதம் புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சை மாவட்ட மீனவர்கள் தங்கச்சிமடத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தி பாக் ஜலசந்தி கடற்பரப்பில் தங்கி மீன் பிடிக்கும் காரைக்கால் மீன்பிடி விசைப்படகளை கடலில் வைத்து சிறை பிடிப்பதாக முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றியதுடன் இது தொடர்பாக காரைக்கால் சென்று மீனவ சங்க பிரதிநிதிகளை காரைக்கால் மீனவ சங்கத்தினரை சந்தித்து அறிவுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் இன்று (10)அதிகாலை தனுஷ்கோடி அருகே பாக் ஜலசந்தி கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ஒரு காரைக்கால் மீன்பிடி விசைப் படகையும், அதிலிருந்த ரோஷன், சுகாசனம், சாத்தையா, வீரமணி, பவன் உள்ளிட்ட 10 மீனவர்களை ராமேஸ்வரம் மீனவர்கள் நடுக்கடலில் வைத்து சிறைபிடித்து ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்திற்கு அழைத்து வ
ந்தனர்.
