Breaking News

செம்பியன் பற்று பகுதியில் இனங்காணப்பட்ட வெடிக்காத மோட்டார் வகைக்குண்டு...!

 செம்பியன் பற்று பகுதியில் இனங்காணப்பட்ட வெடிக்காத மோட்டார் வகைக்குண்டு...!



 யாழ் வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று தனிப்பனை பகுதியில் இன்றைய தினம் (7) பிற்பகல் வெடிக்காத நிலையில் மோட்டார் வகைக்குண்டு ஒன்று இனங்காணப்பட்டுள்ளது


இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது 


குறித்த பகுதியில் வசிக்கும் நபர்கள் ஆடு மேய்ப்பதற்காக காட்டுப்பகுதிக்கு சென்ற போது வெடிக்காத நிலையில் மோட்டார் வகைக்குண்டு ஒன்றினை அவதானித்து உள்ளனர் 




உடனடியாக அவ் நபர்கள் மருதங்கேணி பொலிசாருக்கு அறிவித்த போது சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிசார் ஆபத்தான நிலையில் காணப்பட்ட மோட்டார்வகைக் குண்டினை உரிய பாதுகாப்புடன் அகற்றுவதற்கு கிளிநொச்சி நீதிமன்ற உத்தரவுக்கு தகவலை அனுப்பியுள்ளனர் 


 நீதி மன்ற உத்தரவு கிடைக்கும் வரை குறித்த இடத்தில் பாதுகாப்புக்காக மருதங்கேணி பொலிசார் பாதுகாப்பு நடவடிக்கைகயில் ஈடுபட்டு வ

ருகின்றனர்