சந்நிதியான் ஆச்சிரமத்தில் இன்னிசை அரங்கமும் 446,550 ரூபா உதவிகளும்...!
சந்நிதியான் ஆச்சிரமத்தில் இன்னிசை அரங்கமும் 446,550 ரூபா உதவிகளும்...!
யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரம சைவகலைப் பண்பாட்டு பேரவையின் ஏற்பாட்டில் வாரந்தம் வெள்ளிக்கிழமைகளில் இடம்பெறும் நிகழ்வு சந்நிதியான் அச்சிரம முதல்வர் சாதனை தமிழன் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் இடம்பெற்றது.
இதில் இசை கலைமாமணி நடேசு செல்வசந்திரன் அவர்களின்
ஹார்மோனியம் இசையில் கலா வித்தகர் அருள் விக்னேஸ்வரன் அவர்களின் இன்னிசைக் கச்சேரி இடம்பெற்றது. மிருதங்க இசையை கலாவித்தகர் K.நந்தகுமார் அவர்களும், முகர்சில் இசையை கலா வித்தகர் ப.விக்னேஸ்வரன் அவர்களும் வழங்கினர்.
உதவிகளாக
சங்கானை கிழக்கு, வெல்வில் அறநெறிப் பாடசாலையின் கோரிக்கைக்கு அமைவாக,
ஆழ்துளையிடும் கிணறு திருத்தம் மற்றும் கட்டிட திருத்தச் செலவுகளுக்காக 150,000 ரூபா நிதியும்,
மருத்துவ உதவியாக விவேகானந்தநகர் கிழக்கு, கிளிநொச்சியை சேர்ந்த யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் முன்னால் போராளி ஒருவருக்கு தொடை மூட்டு அறுவைச் சிகிச்சைக்காக 150,000 ரூபா நிதியும் வழங்கி வைக்கப்பட்டத்துடன்
கம்பர்மலை, உடுப்பிட்டியை சேர்ந்த யா/ கம்பர்மலை வித்தியாலயம் தரம் - 7 இல் கல்வி கற்கும் மாணவி,
மூளாய் தெற்கு, சுழிபுரம் பகுதியை சேர்ந்த தரம் - 03 இல் பொன்னாலை வரதராஜப் பெருமாள் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவி,
குஞ்சுக்குளம், மாங்குளத்தைச் சேர்ந்த கனகராயன்குளம் மகாவித்தியாலயத்தில் தரம் - 09 இல் கல்வி கற்கும் மாணவி, ஆகியோருக்கு 146000 பெறுமதியில் தூவிச்சக்கர வண்டியும் வழங்கி வைக்கப்பட்டன.
இந் நிகழ்வில் சந்நிதியான் ஆச்சிரமத்தின் சைவ கலை பண்பாட்டு பேரவை நிர்வாகிகள், உறுப்பினர்கள், சந்நிதியான் அச்சிரம தொண்டர்கள், அடியவர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்
.
