Breaking News

மாலை சந்தை மைக்கல் நேசக்கரத்தின் 08 வது ஆண்டு நிறைவு விழா..!

 மாலை சந்தை மைக்கல் நேசக்கரத்தின் 08 வது ஆண்டு நிறைவு விழா..!



மாலை சந்தை மைக்கல் நேசக்கரத்தின் 08 வது ஆண்டு நிறைவு விழா விளையாட்டுக்கழக மகளிர் பொறுப்பாளரும், மு/விசுவநாதர் ஆரம்ப பாடசாலை ஆசிரியருமான தெ.தாட்சாயினி தலைமையில் மாலை சந்தை ஸ்ரீ வரதராஜ விநாகர் ஆலய திருமண மண்டபத்தில் இன்று காலை 10:00 மணியளவில் இடம்பெற்றது.


இதில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் 

மாலை சந்தை ஸ்ரீ வரதராஜ விநாகர் ஆலயத்திலிருந்து விழா மண்டபம் வரை அழைத்துவரப்பட்டு மங்கல சுடர்கள் ஏற்றப்பட்டன.


மங்கல சுடர்களை நிகழ்வின் பிரதம விருந்தினரும், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கலைத்துறை பீடாதிபதியுமான பேராசிரியர் சிவசுப்ரமணியம் ரகுராம், சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட யா / உடுத்துறை மகா வித்தியாலய அதிபர் நா.தேவராஜா, 

யா / அல்வாய் சின்னத்தம்பி வித்தியாலய அதிபர் 

சிறந்த அறிவிப்பாளரும், ஓய்வுநிலை ஆசிரியருமான 

கி.சிறிகந்தராஜா, மு/யோகபுரம் மகா வித்தியாலய பிரதி அதிபர் புவனேந்திரன் சஜி, 

கௌரவ விருந்தினர்களான கிராம சேவையாளர்

பிரசாந் துவாரகா, கரவெட்டி பிரதேச செயலக

அபிவிருத்தி உத்தியோகத்தர்

திருமதி.பாலகௌரி வினோதன், வடமாகாண கல்வித்திணைக்கள முகாமைத்துவசேவை உத்தியோகத்தர்  

திருமதி. தர்சன் தரணிகா 

, பருத்தித்துறை பிரதேசசபை 

அபிவிருத்தி ஊத்தியோகத்தர்

திருமதி. சுரேஸ் துவாரகா, உட்பட பலரும் ஏற்றி வைத்தனர். 


தொடர்ந்து வரவேற்புரை இடம் பெற்றது. அதனை தொடர்ந்து மைக்கல் விளையாட்டு கழகம் மற்றும் மைக்கல் நேசக்கரத்தின் இள வயதில் மரணமானவர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.  

தலைமை உரையினை மைக்கல் விளையாட்டுக்கழ மகளிர் பொறுப்பாளரும், மு/விசுவநாதர் ஆரம்ப பாடசாலை ஆசிரியருமான தெ.தாட்சாயினி நிகழ்த்தினார்.

அதனை தொடர்ந்து வரவேற்பு நடனம் இடம்பெற்றது.


உரைகளை 

கிராம சேவையாளர்

பிரசாந் துவாரகா, மு/யோகபுரம் மகா வித்தியாலய பிரதி அதிபர் புவனேந்திரன் சஜி, நிகழ்வின் பிரதம விருந்தினரும், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கலைத்துறை பீடாதிபதியுமான பேராசிரியர் சிவசுப்ரமணியம் ரகுராம், உட்பட பலரும் நிகழ்தினர்.


அதனை தொடர்ந்து கல்வி சாதனையாளர்கள் பலரும் கௌரவிக்கப்பட்டனர். தொடர்ந்து பல்வேறு பிரதேசங்களிலும் 

தெரிவு செய்யப்பட்ட 261 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கபட்டன.


இந் நிகழ்வில்

மைக்கல் நேசக்கரத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், மைக்கல் நேசக்கரத்தின் பயனாளிகள், 

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கலைத்துறை பீடாதிபதி பேராசிரியர் சிவசுப்ரமணியம் ரகுராம், யா / உடுத்துறை மகா வித்தியாலய அதிபர் நா.தேவராஜா, 

யா / அல்வாய் சின்னத்தம்பி வித்தியாலய அதிபர் 

கி.சிறிகந்தராஜா, மு/யோகபுரம் மகா வித்தியாலய பிரதி அதிபர் புவனேந்திரன் சஜி, கிராம சேவையாளர்

பிரசாந் துவாரகா, கரவெட்டி பிரதேச செயலக

அபிவிருத்தி உத்தியோகத்தர்

திருமதி.பாலகௌரி வினோதன், வடமாகாண கல்வித்திணைக்கள முகாமைத்துவசேவை உத்தியோகத்தர்  

திருமதி. தர்சன் தரணிகா 

,பருத்தித்துறை பிரதேசசபை 

அபிவிருத்தி ஊத்தியோகத்தர்

திருமதி. சுரேஸ் துவாரகா, மற்றும் நலன் விரும்பிகள் என பலரும்

 கலந்துக்கொண்டனர்.