Breaking News

பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையை இயக்க கிளிநொச்சியில் ஆராய்வு

 பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையை இயக்க கிளிநொச்சியில் ஆராய்வு!



பரந்தன் இரசாயனத் தொழிற் சாலையை மீண்டும் இயங்கு நிலைக்கு கொண்டு வருதல் தொடர்பில் கிளி நொச்சி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் நேற்று ஆராயப்பட்டது.


கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று புதன்கிழமை காலை, கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தின் திறன் விருத்தி மண்டபத்தில் நடைபெற்றது.


டித்வா புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள், இதுவரை மேற்கொள்ளப்பட்ட நிவாரண நடவடிக்கைகள் மற்றும் எதிர்வரும் காலத்தில் முன்னெடுக்க வேண்டிய மீள்கட்டியெழுப்பல் பணிகள் குறித்து கூட்டத்தில் விரிவாகக் கலந்துரையாடப் பட்டது.


மேலும், மாவட்டத்திற்கு ஒதுக்கப் பட்ட அபிவிருத்தி நிதிகளின் பயன்பாடு, மத்திய மற்றும் மாகாண திணைக் களங்களின் திட்ட முன்னேற்றங்கள், புதிய திட்டங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதிகள் ஆகியவை தொடர் பிலும் மதிப்பாய்வு செய்யப்பட்டது.


சட்டவிரோத மணல் அகழ்வால் ஏற்படும் சுற்றுச்சூழல் மற்றும் சமூக பாதிப்புகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்ட துடன், அவற்றைத் தடுக்கும் வகையில் உரிய அதிகாரிகளுக்கு தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன .


அத்துடன், பரந்தன் இரசாயனத் தொழிற் சாலையை மீள இயக்கும் திட்டம் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் தொடர்பிலும் விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.


மக்களின் நலன், மாவட்டத் தின் நிலையான அபிவிருத்தி மற்றும். அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டிய அவசியம் என்பதே இக்கூட்டத்தின் மையக் கருத்

தாக அமைந்தது.