Breaking News

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர்களிற்கான திறன்விருத்தி பயிலரங்கு

 யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர்களிற்கான திறன்விருத்தி பயிலரங்கு!



யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழக ஊழியர்களிற்கான திறன்விருத்தி முழுநாள் பயிலரங்கு கடந்த 17.12.2025 (புதன்கிழமை) அன்று பௌதீகவியல் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. பல்கலைக்கழக ஊழியர் சங்கத் தலைவர் திரு. யசோதன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற பயிலரங்கினை துணைவேந்தர் பேராசிரியர். சி.சிறிசற்குணராசா அவர்கள் தொடக்கவுரையாற்றி தொடக்கி வைத்திருந்தார். 


முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், விடுதிக் காப்பாளர்கள் உள்ளிட்ட நிர்வாகப் பணிநிலை உத்தியோகத்தர்களிற்கு நடைபெற்ற குறித்த பயிலரங்கில் வளவாளர்களாக திரு.இரட்ணசிங்கம் (ஊக்கமும் மனிதவள மேலாண்மையும்), யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் அதிபர் திரு.இ.செந்தில்மாறன் SLEAS (பணித் திறன் மற்றும் திறமையான பணிமுறை), பேராசிரியர். பி.பிரதீப்காந் (பங்கேற்புடன் மேற்கொள்ளப்படும் பணிகள் மற்றும் அரசாங்க விதிமுறைகள்), சட்டத்தரணி கலாநிதி.கு.குருபரன் (தொழிலாளர் உரிமைகள் மற்றும் பொறுப்புக்கள்) ஆகியோர் பயிலரங்கினை வழிநடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


நிர்வாக ஊழியர்களிற்கான தலைமைத்துவத் திறன், குழுப் பண்பாடு மற்றும் மனித உறவுகள், நேர்மறைச் சிந்தனைகள் மற்றும் பணித்திறன் வளர்ப்பு, நேர மேலாண்மை, உற்பத்தித் திறனை உயர்த்தும் உத்திகள், தொடர்பு மற்றும் ஒத்துழைப்புத் திறன், பங்கேற்பு அடிப்படையிலாக பணிமுறைகள், பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு தொடர்புடைய அரச விதிமுறைகள், பொறுப்புணர்வு மற்றும் ஒழுங்குமுறைப் பண்பாடு, வேலைச்சூழலில் கணக்கெடுப்பு மற்றும் வெளிப்படை, பணி விதிமுறைகள் மற்றும் சட்டங்கள், பணிப் பாதுகாப்பு, பணியிட முறையீடுகள் மற்றும் தீர்வுகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் திறன்விருத்தி பயிலரங்கு பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினால் ஒழுங்கமைக்கப்பட்டமை குறிப்பித்த

க்கது.