வலி கண்டி கிராமத்தில் இடம் பெற்ற மர நடுகை நிகழ்வும் விசேட கலந்துரையாடலும்.....!
வலி கண்டி கிராமத்தில் இடம் பெற்ற மர நடுகை நிகழ்வும் விசேட கலந்துரையாடலும்.....!
யாழ் வடமராட்சி கிழக்கு வலி கண்டி கிராமத்தில் புளூஸ் அறக்கட்டளை மற்றும் புளூஸ் விளையாட்டு கழகத்தினரின் நிதிப் பங்களிப்புடன் ஜனநாயக போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் வெண்மதி சிறுவர் கழகத்தின் வேண்டு கோளுக்கு இணங்க இன்று காலை 10 மணியளவில் மர நடுகை நிகழ்வானது ஆரம்பமானது.
இவ் நிகழ்வின் பின்னர் ஜனநாயக போராளிகள் கட்சியின் முக்கியஸ்தர்களுக்கும் வலி கண்டி கிராம மக்களுக்கும் இடையே விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது இவ் கலந்துரையாடலில் வலி கண்டி மக்கள் அண்மைக்காலமாக எதிர் நோக்கி வரும் அடிப்படை பிரச்சனைகள் மற்றும் கிராமத்தின் சிறுவர்களின் பொழுதுபோக்கு சார் எதிர்பார்ப்புக்கள் சம்மந்தமாக உரையாடப்பட்டது
இவ் நிகழ்வின் பிரதம விருந்தினராக ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் சி.வேந்தன் மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சியின் பருத்தித்துறை நகர சபை உறுப்பினர் ஜெய கோபி மற்றும் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர்களான அகஸ்டின் மற்றும் கணைச்செல்வன் அவர்களும் மற்றும் வலிகண்டி வெண்மதி சிறுவர்கள் கழக உறுப்பினர்கள் மற்றும் வலி கண்டி கிராமத்தின் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்
