முஸ்லிம் தமிழ் மக்கள் மன வடுக்களை தீர்த்துக்கொள்ள மனந்திறந்து உரையாடல்கள் அவசியம்..! அரசியல் ஆய்வாளர், சட்டத்தரணி சி.அ.யோதிலிங்கம்
முஸ்லிம் தமிழ் மக்கள் மன வடுக்களை தீர்த்துக்கொள்ள மனந்திறந்து உரையாடல்கள் அவசியம்..! அரசியல் ஆய்வாளர், சட்டத்தரணி சி.அ.யோதிலிங்கம்
முஸ்லிம், தமிழ் மக்களின் மன வடுக்களைத் தீர்த்துக்கொள்ள மனந்திறந்து உரையாடல்கல் அவசியம் என்று அரசியல் ஆய்வாளரும், சட்டத்தரணியும், சமூக விஞ்ஞான ஆய்வு மைய்ய இயக்குநருமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். அவர் இன்று தனது உரும்பிராய் அலுவலகத்தில் நடாத்திய சமகால அரசியல் தொடர்பாக ஊடக மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது
அண்மைக்காலமாக முஸ்லிம், தமிழ் மக்கள் நல்லிணக்கம் தொடர்பான உரையாடல்கள் அதிகரித்துள்ளன
வடக்கிலும் கிழக்கிலும் இடம் பெற்றுள்ளன. இரண்டு தரப்பிலும் அதிகளவான மன வடுக்கள் இருக்கின்றன. மன வடுக்களைத் தீர்த்துக் கொள்வதற்கு மனந்திறந்து உரையாடல்கள் அவசியம் என்றார்.