Breaking News

செம்பியன் பற்றில் இடம்பெற்ற மாபெரும் வர்த்தக சந்தை......!

 செய்தியாளர் 

பூ.லின்ரன்(சர்வதேச ஊடகவியலாளர்)


செம்பியன் பற்றில் இடம்பெற்ற மாபெரும் வர்த்தக சந்தை......!




யாழ் வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று வடக்கு புனித பிலிப்பு நேரியார் ஆலய முன்றலில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணியளவில் திருப்பலியினை தொடர்ந்து மாபெரும் வர்த்தக சந்தை ஒன்று ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் மிக சிறப்பாக இடம்பெற்றது 


குறித்த வர்த்தக சந்தையானது மறைபரப்பு ஞாயிற்றுக்கிழமையை சிறப்பிக்கும் முகமாக செம்பியன் பற்று பங்கின் புனித பிலிப்பு நேரியார் ஆலய ஆன்மீக தொண்டு அமைப்புக்களால் சிறப்பிக்க பட்டதுடன் 


இவ் வர்த்தக சந்தையில் காலை உணவுகள் மற்றும் மரக்கறிகள் பழவகைகள் இறைச்சி வகைகள் என பல்வேறு பட்ட பண்டங்கள் காட்சி படுத்த பட்டதுடன் விற்பனை நடவடிக்கைகளும் மேற் கொள்ள பட்டது 


இவ் வர்த்தக சந்தையில் பொதுமக்கள் செம்பியன் பற்று பங்கு தந்தை ஜஸ்டின் ஆதர் மற்றும் அருட்சகோதரிகள் ஆன்மீக தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்