Breaking News

சிறுவர் அபிவிருத்தித் திட்டங்களின் ஒன்றிணைந்த சிறுவர் தின கொண்டாட்டம் இன்று கிளிநொச்சியில் நடைபெற்றது.

சிறுவர் அபிவிருத்தித் திட்டங்களின் ஒன்றிணைந்த சிறுவர் தின கொண்டாட்டம் இன்று கிளிநொச்சியில் நடைபெற்றது.



கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் தென்னிந்திய திருச்சபையால் முன்னெடுக்கப்படும் சிறுவர் அவிவிருத்தித் திட்டங்களை ஒன்றிணைத்து குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.


கூட்டுறவு மண்டபத்தில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக தென்னிந்திய திருச்சபை யாழ் ஆதீன பேராயர் அதி வண கலாநிதி வேலுப்பிள்ளை பத்மதயாளன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.


கரைச்சி பிரதேச செயலாளர் த.முகுந்தன், கிளி நகர கிராம சேவையாளர் ஜயந்தன், திருச்சபை ஊழியர்கள், திட்ட முகாமையாளர்கள், பணியாளர்கள், பிள்ளைகள், பெற்றோர் என பெருமளவானோர் கலந்து கொண்டனர்.


சிறுவர்கள், விருந்தினர்கள் மாலை அணிவிக்கப்பட்டு மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டதைத் தொடர்ந்து சிறுவர்களின் கலைநிகழ்வுகள் நடைபெற்றது.


தொடர்ந்து பரிசுகளும் வழங்கி வைக்கப்பட்டது.