சட்ட விரோதமாக மண் அகழ்வு இடம் பெரும் இடங்களுக்கு அதிரடியாக களம் இறங்கிய பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன்...!
சட்ட விரோதமாக மண் அகழ்வு இடம் பெரும் இடங்களுக்கு அதிரடியாக களம் இறங்கிய பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன்...!
யாழ் வடமராட்சி கிழக்கு பிரதேச பகுதியில் தற்பொழுது சட்ட விரோதமாக மண் விநியோகம் அதிகளவு இடம்பெற்று வருகின்றன இச் சம்பவம் தொடர்பாக பல முறைப்பாடுகள் மருதங்கேணி பொலிஸார்க்கு கிடைக்கப்பெற்றும் அது தொடர்பாக எந்த விதமான நட வெடிக்கைகளும் எடுக்காத நிலையில்
இன்றைய தினம் வீடமைப்பு அதிகார சபையினரால் வழங்கப்பட்ட வீடுகள் கையளிப்பு நிகழ்வுக்கு வருகை தந்த பாராளுமன்ற உறுப்பினரும் வடமராட்சி கிழக்கு பிரதேச அபிவிருத்தி குழு தலைவருமான இளங்குமரன் ஊடகவியலாளரான பூ.லின்ரன் என்பவரின் வேண்டுகோளுக்கு இணங்க உடனடியாக சட்ட விரோதமாக மண் விநியோகம் செய்யப்படும் இடத்திற்கு சென்றார்
அங்கு சென்று மண் அகழ்வு செய்யும் பிரதேசங்களை பார்வையிட்டு இச் சட்ட விரோதமான செயற்பாடுகளில் ஈடுபட்டு வரும் நபர்கள் தொடர்பான தகவல்களை திரட்டி சென்றுள்ளார் மற்றும் குறித்த பிரதேசத்தில் அருகாமையில் பொலிஸ் நிலையம் இருப்பதால் இவ் சட்ட விரோதமான செயற்பாடுகளில் பொலிசாருக்க்கும் நிச்சயமாக தொடர்பு இருக்கும் என கூறி அவர்கள் சம்பந்தமாகவும் உடனடியாக நடவெடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியதுடன்
இவ்வாறான சட்ட விரோதமாக நடவெடிக்கைகளை கட்டுபடுத்த பொது மக்களும் தமக்கு உதவி செய்ய வேண்டும் என கூறியள்ளதுடன் இவ் அதிரடி நடவடிக்கைக்கு தேசிய மக்கள் சக்தியின் வடமராட்சி அமைப்பாளரும் மற்றும் பருத்தித்துறை பிரதேச சபையின் 10வட்டார உறுப்பினரும் வருகை தந்தமை குறிப்பிடத்த
க்கது.
செய்தியாளர்
பூ.லின்ரன்
