Breaking News

துயிலும் இல்லங்களை தமது அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்தும் தமிழரசுக்கட்சி போராளிகள் மாவிரர் குடும்ப நல காப்பக தலைவர் தீபன் குற்றச்சாட்டு.....!

 பூ.லின்ரன்

செய்தியாளர் 


துயிலும் இல்லங்களை தமது அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்தும் தமிழரசுக்கட்சி போராளிகள் மாவிரர் குடும்ப நல காப்பக தலைவர் தீபன் குற்றச்சாட்டு.....!




இன்றைய தினம் புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கு முன்பாக தேவி புர மாவிரர் துயிலுமில்லத்தினை தாவரவியல் பூங்காவாக அடையாள படுத்துவதற்கு எதிராக ஒர் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் 


குறித்த ஆர்ப்பாட்டம் புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் கரிகாலன் அவர்கள் குறித்த தீர்மானத்தை மாற்றுவதாக நம்பிக்கைக்குரிய நபரிடம் கூறியதால் திட்டமிட்ட ஆர்ப்பாட்டம் நிறுத்தப்பட்டது 


ஆர்ப்பாட்டம் திட்டமிட்ட இடத்த்திறக்கு வருகை தந்த போராளிகள் மாவிரர் குடும்ப நல காப்பக தலைவர் தீபன் அவர்கள் ஊடகங்களுக்கு கருத்து வழங்கையில் துயிலும் இல்லங்களை தமது அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்தி வருகின்றனர் என குற்றம் சாட்டியுள்ளார் 


மேலும் அவர் கூறுகையில் 



மாவீரர்களின் துயிலும் இல்லங்களை தமது கட்சியின் ஆதிக்கத்தை பயன்படுத்தி தமிழரசு கட்சி நிர்வாகத்தினை தெரிவு செய்து அவ் நிர்வாகத்தில் தமது கட்சியின் முக்கியஸ்தர்களை தெரிவு செய்து வருகின்றனர் 


அதன் தொடர்ச்சியாக இந்த தேவிபுர துயிலும் இலத்தினையும் தாவரவியல் பூங்கா எனும் கட்டமைப்புக்கு கொண்டு வர எண்ணுவதாகவும் அதற்கு ஒரு போதும் தாம் சம்மதிக்க போவதில்லை எனவும் கூறியுள்ளார்


இதே போல போலியான செயற்பாடுகளை இனிமேல் முன் னெடுத்ததால் தாம் வீதிக்கு இறங்கி தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம் எனவும் கூறியுள்ளார்