Breaking News

சென் பிலிப் நேரிஸ் முன்பள்ளியில் சிறப்பாக இடம்பெற்ற ஆசிரியர் தின விழா......!

 செய்தியாளர் 

பூ.லின்ரன்



சென் பிலிப் நேரிஸ் முன்பள்ளியில் சிறப்பாக இடம்பெற்ற ஆசிரியர் தின விழா......!




யாழ் வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று வடக்கு புனித சென் பிலிப் நேரிஸ் முன்பள்ளியின் ஆசிரியர் தின விழா இன்றைய தினம் புதன் கிழமை ஆசிரியர் தின விழாவினை முன்பள்ளியின் வளாகத்தில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது 


இவ் நிகழ்வின் ஆர்ப்பாட்டத்தில் முன்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் சிறுவர்கள் மலர் மாலை போட்டு கௌரவிக்க பட்டனர் அதனை தொடர்ந்து விருந்தினர்கள் மற்றும் ஆசிரியர்கள் வரவேற்கப்பட்டு பின் சிறுவர்களின் கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றது 


இவ் நிகழ்வின் பிரதம விருந்தினராக செம்பியன் பற்று பங்கு தந்தை ஜஸ்டின் ஆதர் மற்றும் விருந்தினராக அருட்சகோதரிகள் மற்றும் செம்பியன் பற்று வடக்கு பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் முன்பள்ளி சிறுவர்களின் பெற்றார் என பலரும் கலந்து கொண்டனர்