பருத்தித்துறையில் மிகவும் சிறப்பாக இடம்பெற்ற இரத்ததான நிகழ்வு.....!
பூ.லின்ரன்
செய்தியாளர்
பருத்தித்துறையில் மிகவும் சிறப்பாக இடம்பெற்ற இரத்ததான நிகழ்வு.....!
உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு இன்றய தினம் (9) பருத்தித்துறை அஞ்சல் அலுவலகத்தால் இரத்த தான நிகழ்வொன்று காலை 9 மணியளவில் பருத்தித்துறை அஞ்சல் அலுவலக மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் குறித்த நிகழ்வு மிகவும் சிறப்பாகவும் இடம்பெற்றது
குறித்த இரத்த தான நிகழ்வுக்கு வடமராட்சி லயன்ஸ் கழகம் தமது பூரண ஒத்துழைப்பை வழங்கியதுடன் அஞ்சல் உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டு இரத்த தானத்தை மேற்கொண்டனர்
