வடமராட்சி கிழக்கு பிரதேச சிறுவர் முதியோர் தினம் 2025
வடமராட்சி கிழக்கு பிரதேச சிறுவர் முதியோர் தினம் 2025
வடமராட்சி கிழக்கு பிரதேச முதியோர் மற்றும் சிறுவர் தின நிகழ்வு வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் சுபலிங்கம் உஷா தலமையில் இன்று பிற்பகல் 3:00 மணியளவில் குடத்தனை குறிஸ்து நற்தூது பணியக விழா மண்டபத்தில் இடம் பெற்றது. இதில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் மாலை அணிவிக்கப்பட்டு விழா மண்டபம் வரை அழைத்துவரப்பட்டு மங்கல சுடர்கள் ஏற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின.
மங்கல சுடர்களை
நிகழ்வின் பிரதம விருந்தினரும் , பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை பதில் அத்தியட்சகருமான கதிரமலை உமாசுதன்,
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் தொழில்துறை வழிகாட்டல் ஆலோசகர் குஞ்சிபாதம் கௌதமன், பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் உதயகுமர் யுதீஸ், குடத்தனை கரையூர் அ.த.க.பாடசாலை அதிபர் மு.கதிர்காமலிங்கம், மருதங்கேணி கோட்டக்கல்வி பணிப்பாளர் செ. சிறிராமசந்திரன்
மருதங்கேணி பொலீஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி, மற்றும் பலர் ஏற்றிவைத்ததை தொடர்ந்து வரவேற்புரையை வடமராட்சி கிழக்கு முதியோர் சங்க தலைவர் திரு.வேலாயுதம் நிகழ்த்தியதை தொடர்ந்து தலமை உரையினை நிகழ்வின் தலைவரும் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலருமான சுபலிங்கம் உஷா நிகழ்த்தியதை தொடர்ந்து பிரதேச கலைஞர்களின் பாடல், நடனம், கிராமிய பாடல்கள் உட்பட பல்வேறு கலை நிகழ்வுகளும் இடம் பெற்றது.
இதேவேளை சிறுவர் தினத்தை முன்னிட்டு சிறுவர்கள், முதியோருக்கிடையில் நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசில்களை நிகழ்வின் சிறப்பு பிரதம விருந்தினர்கள் வழங்கி கௌரவித்ததுடன் உரைகளையும் நிகழ்த்தினர்.
இந்நிகழ்வில்
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை பதில் அத்தியட்சகரும், உள நல வைத்திய அதிகாரியுமான கதிரமலை உமாசுதன்,
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் தொழில்துறை வழிகாட்டல் ஆலோசகர் குஞ்சிபாதம் கௌதமன், பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் உதயகுமர் யுதீஸ், குடத்தனை கரையூர் அ.த.க.பாடசாலை அதிபர் மு.கதிர்காமலிங்கம், மருதங்கேணி கோட்டக்கல்வி பணிப்பாளர் செ. சிறிராமசந்திரன்
மருதங்கேணி பொலீஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி, வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச முதியவர்கள், சிறுவர்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்
தனர்.