Breaking News

ஊடகவியலாளர்களை சமூக விரோதிகள் போல் நடத்திய நாகர் கோவில் மகா வித்தியாலய அதிபர் மற்றும் ஆசிரியர்கள்......!

 ஊடகவியலாளர்களை சமூக விரோதிகள் போல் நடத்திய நாகர் கோவில் மகா வித்தியாலய அதிபர் மற்றும் ஆசிரியர்கள்......!



1995ஆம் ஆண்டு நாகர் கோவில் மகாவித்தியாலயத்தின் மீது நடாத்தப்பட்ட விமான குண்டு தாக்குதலில் பலியான 21 மாணவர்களின் நினைவேந்தல் இன்றைய தினம் 12:5 மணியளவில் உணர்வு ரீதியாக பலியான மாணவர்களின் நினைவுத்தூவியில் ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் இவ் நினைவேந்தலில் பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்களால் சமூக விரோதிகள் போல சித்தரிக்கப்பட்டு ஊடகவியலாளர் விரட்டபட்டார்கள்


இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது 



நேற்றைய தினம் செய்தி சேகரிப்பதற்காக ஊடகவியலாளர்கள் நாகர் கோவில் பகுதியில் உள்ள பாடசாலையான நாகர் கோவில் மகாவித்தியாலயத்திற்கு சென்ற வேலை பாடசாலை வளாகத்தின் நுழை வாயில் பகுதியில் பாடசாலை ஆசிரியர்களால் இவ் நினைவேந்தலுக்கு ஊடகவியலாளர்கள் அனுமதிக்க பட மாட்டார்கள் என கூறிய போது பெரிய வாக்கு வாதம் இடம் பெற்றது 


இச் சம்பவத்தில் ஆசிரியர்களால் கூறப்பட்ட விடயம் என்னவென்றால் வலயக்கல்வி பணிப்பாளர் அவர்களால் ஊடகவியலாளர்களை அனுமதிக்க கூடாது என கூறப்பட்டதாகவும் அதனால் இவ் நிகழ்வில் நீங்கள் செய்தி சேகரிக்க முடியாது எனவும் மிலேச்சர் தனமாக கூறப்பட்டது 


அதனை தொடர்ந்து ஊடகவியலாளர்கள் உடனடியாக வலயக்கல்வி பணிப்பாளரை தொடர்பு கொண்ட போது பணிப்பாளர் அவர்களால் கூறப்பட்டது என்னவென்றால் தான் அது சம்பந்தமாக எந்த விதமான கட்டளையும் விட வில்லை என கூறப்பட்டது அதனை தொடர்ந்து பாடசாலை அதிபரிடம் ஊடகவியலாளர் உரையாட விரும்பிய போது சம்பவ இடத்துக்கு வருகை தந்த அதிபர் உங்களை விட முடியாது ஊடகவியலாளர்கள் இதில் நிற்பது சட்ட விரோதமான செயற்பாடு விடியோ போட்டோ எடுப்பது தண்டனைக்குரிய குற்றம் என பலத்த தொனியில் கூறி ஊடகவியலாளர்களை நுழைவாயிலுக்கு வெளியில் விடப்பட்டு கதவினை பூட்டி சென்றார் 


அதனை தொடர்ந்து நினைவேந்தலுக்கு வந்த விமான குண்டு தாக்குதலில் பலியான உறவினர்களிடம் சென்று ஊடகவியலாளர்களை இவ் நினைவேந்தலில் குழப்பம் ஏற்படுத்த வந்த சமூக விரோதிகள் நீங்கள் அவர்களிடம் போய் அவர்களை விரட்டுங்கள் என மனதை உருக்கும் விடயங்களை கூறிய சம்பவமும் நடந்தது 


இதனை விட தனது சொந்த தேவைக்காக தகவல் சேகரிக்க வந்த நபரை அனுமதிக்கப்பட்ட சம்பவம் ஒன்றும் அதிபரின் சொந்த விருப்பில் இடம்பெற்றது.