மிகவும் சிறப்பாக இடம்பெற்றது செம்பியன் பற்று மறைக்கல்வி மாணவர்களின் கலை நிகழ்வுகள்...!
மிகவும் சிறப்பாக இடம்பெற்றது செம்பியன் பற்று மறைக்கல்வி மாணவர்களின் கலை நிகழ்வுகள்...!
தேசிய மறைக்கல்வி வாரத்தினை முன்னிட்டு இந்த வாரம் செம்பியன் பற்று பங்கின் புனித பிலிப்பு நேரியார் ஆலயத்தினரால் மறைக்கல்வி வாரமாக பிரகடனப்படுத்தப்பட்ட நிலையில் வாரம் முழுவதும் ஆன்மீகம் மற்றும் உடல் உள சார்ந்த நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டு வருகின்றன
அந்த வகையில் இன்றய தினம்(18) கலை நிகழ்ச்சிகள் மற்றும் கண்காட்சிகள் ஒழுங்கு செய்யப்பட்டது அதன் அடிப்படையில் இன்று பிற்பகல் மாலை திருப்பலியினை தொடர்ந்து செம்பியன் பற்று பங்கு தந்தை ஜஸ்டின் ஆதர் தலைமையில் கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றம் செய்யப்பட்டது
இவ் கலை நிகழ்வுகளில் மறைக்கல்வி மாணவர்கள் நாடகம் புனிதர்களின் வரலாறு மற்றும் அபிநயம் நடனம் பாடல் போன்ற நிகழ்வுகளை மேடையேற்றம் செய்தனர் மிகவும் சிறப்பாக இடம்பெற்ற கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களால் கவணமீர்க்கப்பட்டு கலை நிகழ்வுகளில் பங்கு கொண்ட மறைக்கல்வி மாணவர்கள் பாரட்டப்பட்டு சென்றமை குறிப்பிட தக்கது
கலைநிகழ்வுகளை கண்டு கழிப்பதற்காக பொது மக்கள் மற்றும் இளைஞர்கள் மறை ஆசிரியர்கள் அருட்தந்தை கள் அருட்சகோதரி கள் என பலரும் கலந்து கொண்டனர்
