மிகவும் சிறப்பாக இடம்பெற்றது தாளையடி றோ.க.த.க பாடசாலை சிறுவர் தினம்......!
மிகவும் சிறப்பாக இடம்பெற்றது தாளையடி றோ.க.த.க பாடசாலை சிறுவர் தினம்......!
உலக சிறுவர் தினமான இன்று யாழ் வடமராட்சி கிழக்கு தாளையடி றோ.க.த.க பாடசாலையில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது இவ் நிகழ்வானது காலை 9 மணியளவில் பாடசாலை மண்டபத்தில் பாடசாலை அதிபர் தலைமையில் ஆரம்பமானது
இவ் நிகழ்வில் ஆரம்பத்தில் சிறுவர்கள் கௌரவிக்கப்பட்டு பின் சிறுவர்களின் கலைநிகழ்ச்சிகள் இடம் பெற்றது பின் சிறுவர்களுக்கு பரிசில் பொதிகள் வழங்கப்பட்டது
இவ் நிகழ்வின் பிரதம விருந்தினராக செம்பியன் பற்று பங்கு தந்தை ஜஸ்டின் ஆதர் அவர்களும் மற்றும் விருந்தினராக மருதங்கேணி பொலிஸ் அதிகாரி மற்றும் மருதங்கேணி கிராம அலுவலர் மற்றும் தாளையடி கிராம பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என்போர் பிரதிநிதிகளாக கலந்து கொண்டனர்
செய்தியாளர்
பூ.லின்ரன
