Breaking News

வடமராட்சி தெற்கு மேற்கு பண்பாட்டு பெருவிழா..

 வடமராட்சி தெற்கு மேற்கு பண்பாட்டு பெருவிழா..!



வடக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் அலகின் அனுசரணையில் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச செயலகமும், பிரதேச கலாசா பேரவையும் இணைந்து நடாத்திய பண்பாட்டு பெருவிழா இன்று பிற்பகல் 2:30 மணியளவில் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச செயலர் திருமதி உமாமகள் மணிவண்ணன் 

தலமையில் நெல்லியடி மத்திய கல்லூரியில் இடம் பெற்றது.


இதில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் மலர்மாலை அணிவிக்கப்பட்டு மங்கள வாத்திய இசை முழங்க விழா மண்டபம் வரை அழைத்துவரப்பட்டு அங்கு மங்கல சுடர்கள் ஏற்றப்பட்டன.

மங்கல சுடர்களை நிகழ்வின் பிரதம விருந்தினரும், யாழ்ப்பாணம் மாவட்ட செயலருமான மருதலிங்கம் பிரதீபன், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட வடமாகாண பண்பாட்டு அலகு பிரதி பணிப்பாளர் திருமதி லாகினி நிருபராஜ், கௌரவ விருந்தினர்களாக கலந்துகொண்ட யாழ்ப்பாணம் மாவட்ட செயலக சிரேஸ்ர கலாசார உத்தியோகத்தர் சுகுணலினி விஜயரட்ணம், 

மூத்ய கலைஞர்களான கந்தன் பாலன், திருமதி சிவகுரு சிவகுரு பேரின்பநாயகி, பிரதேச கலாசார பேரவை உப தலைவரும் விரிவுரையாளருமான வேல்நந்தன், உட்பட பலரும் ஏற்றிவைத்ததை தொடர்ந்து வரவேற்பு நடனம் தொடர்ந்து அமிர்தவாகினி இசை மன்ற மாணவர்களின் தமிழ்த்தாய் வாழ்த்தும், குருசேத்திரம் நடனாலயா மாணவர்களின் வரவேற்பு நடனமும் இடம் பெற்றது. வரவேற்புரையினை பிரதி பிரதேச செயலர் சிவகாமி உமாகாந்தன் நிகழ்த்தியதை தொடர்ந்து தலமையுரையினை பிரதேச செயலர் திருமதி உமாமகள் மணிவண்ணன் நிகழ்த்தினார்.


கலாநிதி தம்பிஐயா கலாமணி அவர்களது அரங்க திறப்புரையினை கிளிநொச்சி குமாரசாமிபுரம் பாடசாலை அதிபர் மா.செல்வதாஸ் நிகழ்த்தினார்.


அதனை தொடர்ந்து விக்னா இசை மன்ற கலைஞர்களின் இசைக்கச்சேரியும், சதாபொன்ஸ் அஸ்விகா நடனாலய மாணவர்களின் ஒயிலாட்டமும், அமிர்தவாகினி இசைமன்ற மாணவர்களின் கிராமிய பாடல்களும், கலாசார மத்திய நிலைய மாணவர்களின் கௌத்துவமும், குருசேத்திரா நடனாலய மாணவர்களின் கும்மி நடனமும், கம்பர்மலை கலாபூசணம் கந்தையா விஜயரத்தினம் கலாமன்றத்தினரின் காத்தவராயன் சிந்துநடைக் கூத்தும் இடம் பெற்றது. 


கருத்துரைகள நிகழ்வின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட 

வடமாகாண பண்பாட்டு அலகு பிரதி பணிப்பாளர் திருமதி லாகினி நிருபராஜ், 

யாழ்ப்பாணம் மாவட்ட செயலருமான மருதலிங்கம் பிரதீபன் ஆகியோர் நிகழ்த்தியதுடன் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச செயலர், உதவி பிரதேச செயலர், பிரதேச கலாசார பேரவை உப தலைவர் செந்தில்நந்தன் உட்பட பலரும் இணைந்து மிருதங்க வாத்தியக்கலைக்காக மாணிக்கம் சந்தப்பு அவர்களுக்கும், கூத்துக்காக முருகன் சிவபாதசுந்தரம் அவர்களுக்கும், உடுக்கு வாத்தியக்கலைக்காக நாகமுத்து முத்துராசா அவர்களுக்கும், நாடகத்திற்க்காக சீனியன் ஆறுமுகம் ஆகியோருக்கு கலை ஞான வாருதி விருதுகளையும், 


இலக்கியத்திற்க்கா பொன்னம்பலம் சுகந்தன் அவர்களுக்கும், இசை மற்றும் வாய்ப்பாட்டுக்காக திருமதி ஜெயபாரதி கௌசிகன் அவர்களுக்கும், சிவபாதராசா மோகன்ராஜ் , இலக்கியத்திற்க்காக சின்னராசா உதயகுமார் அவர்களுக்கும் கலைவாருதி விருதுகளையும், கவிதைக்காக மார்க்கண்டு செல்வதால் அவர்களுக்கும், ஹார்மோனியம் கீபோட் வாத்தியக்கலைக்காக மதியுகங்கன் மனுசங்கர் அவர்களுக்கும் இளங்கலைர் விருதுகளையும் வழங்கிவைத்தனர்.


இந்நிகழ்வில் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச கலாசார பேரவை நிர்வாகிகள், உறுப்பினர்கள் பிரதேச மக்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.