எதிர்வரும் முதலாம் திகதியிலிருந்து லஞ்சீற்றுக்கு தடை, மாற்றீடாக வாழையிலை பயன்படுத்துவதென தீர்மானம்..!
எதிர்வரும் முதலாம் திகதியிலிருந்து லஞ்சீற்றுக்கு தடை, மாற்றீடாக வாழையிலை பயன்படுத்துவதென தீர்மானம்..!
பருத்தித்துறை நகரசபைக்கு உட்பட்ட உணவகங்களில் எதிர்வரும் முதலாம் திகதி முதல் லஞ்சீற் பயன்படுத்துவதை நிறுத்துவதென்று பருத்தித்துறை நகரசபையும், பருத்தித்துறை நகர வர்த்தகர்களும் இன்று தீர்மானித்துள்ளனர்.
பருத்தித்துறை நகரசபைக்கு உட்பட்ட உணவகங்களில் லஞ்சீற் உட்பட லொலீத்தீன் பயன்பாட்டை கட்டுப்படுத்திவது தொடர்பாக பருத்தித்துறை நகரசபை மண்டபத்தில் பருத்தித்துறை நகரசபை தவிசாளர் வின்சன்டீபோல் டக்ளஸ் போல் தலமையில் நகர வர்தகர்களுடன் இடம் பெற்ற கூட்டத்திலேயே எதிர்வரும் முதலாம் திகதியிலிருந்து உணவகங்களில் பொலித்தீன் பயன்படுத்துவதில்லையென்றும், அதற்கு பதிலாக வாளையிலையை பயன்படுத்துவதெனவும், எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதியிலிருந்து பொலித்தீன் பயன்பாட்டை முற்றுமுழுதாக நிறுத்துவதென்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை உணவகங்களில் உணவுப்பொதி செய்வதற்கு ஜனவரி முதலாம் திகதிவரை அனிமதிப்பதென்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது
.
