சித்தங்கேணியில் நடைபெற்ற 60வது ஆண்டு வைர விளையாட்டு விழா!
சித்தங்கேணியில் நடைபெற்ற 60வது ஆண்டு வைர விளையாட்டு விழா!
சித்தங்கேணி மாதர் கிராம அபிவிருத்தி சங்கமும் முகாமைத்துவ குழுவும் இணைந்து நடாத்தும் பாலர் பாடசாலையின் 60வது ஆண்டு வைர விளையாட்டு விழாவானது நேற்றையதினம் சித்தங்கேணி பிள்ளையார் ஆலய பின் வீதியில் நடைபெற்றது.
இதன்போது விருந்தினர்கள் மாலை அணிவித்து, சிறுவர்கள் மேற்கத்தேய இசை வாத்தியங்கள் இசைக்க நிகழ்வு நடைபெறும் இடத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அதனைத் தொடர்ந்து மங்கல விளக்கேற்றி, ஒலிம்பிக் தீபம் ஏற்றி வைக்கப்பட்டு விளையாட்டு விழா ஆரம்பமானது. பின்னர் சிறார்களின் விளையாட்டு நிகழ்வுகள், பரிசில்கள் வழங்கல் போன்றன இடம்பெற்றிருந்தன.
சித்தங்கேணி மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் தங்கராசா கோமளவள்ளியின் தலைமையில் நடைபெற்ற இந்த விளையாட்டு விழாவில் பிரதம விருந்தினராக வலிகாமம் மேற்கு பிரதேச செயலர் கவிதா உதயகுமார் கலந்து சிறப்பித்ததுடன், மதகுருக்கள், சிறப்பு விருந்தினர்கள், கௌரவ விருந்தினர்கள், முன்பள்ளி ஆசிரியர்கள், முன்பள்ளி மாணவர்கள், பெற்றோர் மற்றும் பார்வையாளர்கள் என பலரும் கலந்துகொண்ட
னர்.
