ஊடகவியலாளருக்கன கிளீன் ஸ்ரீலங்கா விழிப்புணர்வு கைதடியில் !
ஊடகவியலாளருக்கன கிளீன் ஸ்ரீலங்கா விழிப்புணர்வு கைதடியில் !
......
ஜனாதிபதியின் எண்ணக்கருவுக்கமைய முன்னெடுக்கப்பட்டுவதும் தூய்மையன இலங்கை செயற்றிட்டத்தின் முதலாவது விழிப்புணர்வுக்கான செயற்றிட்டம் நேற்றையதினம் (13) ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இன்றையதினம் (14) யாழ் மாவட்ட ஊடகவியலாளர்களுடனான விழிப்புணர்வுக் கலந்துரையாடல் ஒன்று யாழ்ப்பாணம் கைதடியில் முன்னெடுக்கப்பட்டது
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வடக்கு மாகண சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற செயலமர்வை மாகாண சபையின் பிரதம செயலாளர் திருமதி தனுஜா மங்கள விளக்கேற்றி ஆரம்பித்து வைத்தார்.
தொடர்ந்து கிளீன் ஶ்ரீலங்கா பணிப்பாளர் செயலணியின் பிரதிநிதியும் ஜனாதிபதியின் உதவிச் செயலாளருமான மனோகரன் சாரதாஞ்சலி வளவாளராக கலந்துகொண்டு கருத்துக்களை வழங்கியிருந்தார்.
யாழ் மாவட்ட ஊடகவியலாளர்கள், ஊடககற்கையை முன்னெடுக்கும் மாணவர்கள்
என 50 இற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட இந்த செயலமர்வு மதியம் 1 மணிவரை நடைபெற்றது.
முன்பதாக இதயபூர்வமான யாழ்ப்பாணத்திற்கு - ஒற்றுமையின் தூய்மையான நெடும்பயணம்" எனும் கருப்பொருளிலான செயற்திட்டத்தினை முன்னெடுக்கும் வகையில் நேற்றையதினம் செயலணியின் குழு யாழ்ப்பாணம் வந்திருந்தமை குறிப்புடத்தக்கது.
000