Breaking News

நல்லிணக்கத்தை பிரதான இலக்காகக்கொண்ட இலங்கைத் தினம் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தினை இவ்வருடம் டிசம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் நடாத்த புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது

நல்லிண


க்கத்தை பிரதான இலக்காகக்கொண்ட இலங்கைத் தினம் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தினை இவ்வருடம் டிசம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் நடாத்த புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது.


இலங்கைத் தினம்' தேசிய விழா தொடர்பான கிளிநொச்சி மாவட்டத்திற்கான கலந்துரையாடல் இன்று(25.08.2025) திங்கட்கிழமை பிற்பகல் 02.00 மணிக்கு நடைபெற்றது.


குறித்த கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் அவர்களின் தலைமையில், மாவட்ட செயலக திறன் விருத்தி மண்டபத்தில் நடைபெற்றது.


இலங்கைத் தினம் ஏற்பாட்டுக்குழுவின் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் Y.அனிருதனன், பேராசிரியர் ஜெகத் வீரசேகர, சிரேஸ்ட விரிவுரையாளர் விமல் சுவாமிநாதன், நடிகை சமனலி பொன்சேகா, திரைப்பட இயக்குநர் கிங் இரத்னம், பாடகர் சுதந்த மாதேவ் உள்ளிட்டவர்களின் பங்குபற்றலுடன் நடைபெற்றது. 


இலங்கைத் தினம்' தேசிய விழா ஏற்பாட்டுக் கூட்டத்தின் அங்கமாக கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து குறித்த நிகழ்விற்கான கருத்துக்கள் இதன்போது கேட்டறியப்பட்டது.


கலந்து கொண்டிருந்தவர்கள் கிளிநொச்சி மாவட்டத்திற்கான தனித்துவமான கலை கலாசார பண்பாடு விடயங்கள், உணவுகள், விளையாட்டுக்கள் மற்றும் தொழில் முனைவுகள் தொடர்பிலான பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். மேலும் srilankanday12@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்க முடியும்.


இக்கலந்துரையாடலில் உதவி மாவட்ட செயலாளர் ஹ.சத்தியஜீவிதா, கலாசார உத்தியோகத்தர்கள், கலைஞர்கள், கலை மன்றங்களின் நிர்வாக உறுப்பினர்கள், பாரம்பரிய தொழில்கள் சார் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.