மிக முக்கியமான பாதாள உலக கோஷ்டி தலைவர்கள் கைது.
மிக முக்கியமான பாதாள உலக கோஷ்டி தலைவர்கள் கைது.
கெஹல்பத்தர பத்மே மற்றும் கமாண்டோ சாலிந்தா உள்ளிட்ட இலங்கையின் முக்கிய பாதாள உலக கோஷ்டியை சேர்ந்த 06 பேர் இந்தோனேசியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை குற்றப் புலனாய்வுப் பிரிவு (CID) மற்றும் இன்டர்போல் இணைந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையின் போது இந்தக் கைதுகள் மேற்கொள்ளப்பட்டன.
கைது செய்யப்பட்டவர்களில் பாணந்துறை நிலங்க, பேக்கோ சமன் மற்றும் அவரது மனைவி மற்றும் மற்றொரு நபரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர்களின் திட்டங்கள் மற்றும் சர்வதேச தொடர்புகள் குறித்து மேலும் விசாரணைகள் நடைபெற்று வருவதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
