தேசிய மூலிகை பயிர்ச்செய்கை திட்டம் மற்றும் மூலிகை சேகரிப்பு திட்டம் தொடர்பாக வடமாகாண சுதேச மருத்துவர்களுக்கான கலந்துரையாடல் இன்று பிற்பகல் கிளிநொச்சி பிராந்திய சுகாதாரசேவைகள் பணிமனை மண்டபத்தில் நடைபெற்றது
தேசிய மூலிகை பயிர்ச்செய்கை திட்டம் மற்றும் மூலிகை சேகரிப்பு திட்டம் தொடர்பாக வடமாகாண சுதேச மருத்துவர்களுக்கான கலந்துரையாடல் இன்று பிற்பகல் கிளிநொச்சி பிராந்திய சுகாதாரசேவைகள் பணிமனை மண்டபத்தில் நடைபெற்றது. .
குறித்த திட்டத்தின் இணைப்பாளர் சட்டத்தரணி சமந்தா கோரலேராச்சி தலைமையில் நடைபெற்றது. குறித்த கலந்துரையாடலில் வடமாகாண சுதேச மருத்துவ திணைக்கள ஆணையாளர் வைத்தியர் தி.சர்வானந்தன், கொழும்பு மாவட்ட சுதேச திணைக்கள சமுதாய மருத்துவர் விக்கும் சந்திரத்ன,யாழ் பல்கலைக்கழக சித்த மருத்துவத்துறை சிரேஸ்ட விரிவுரையாளர் நவலக்சுமி ,தேசிய மக்கள் சக்தியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் மருங்கன் மோகன், பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்டோர். கலந்து கொண்டனர்.