பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட குழுவினர் கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு விஜயம்..!
பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட குழுவினர் கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு விஜயம்..!
பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கலாநிதி. ஏ.எச்.எம்.எச் அபயரத்ன மற்றும் அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோக பண்டார உள்ளிட்ட குழுவினர் நேற்று மாலை கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு விஜயம் மேற்கொண்டு மாவட்ட செயலகத்தின் செயற்பாடுகளை பார்வையிட்டனர்.
தொடர்ந்து மாவட்ட அரசாங்க அதிபர் S.முரளிதரன், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் நளாயினி இன்பராஜ், மேலதிக அரசாங்க அதிபர் (காணி)அஜிதா பிரதீபன், மற்றும் ஏனைய பதவி நிலை உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடலை மேற்கொண்டனர்.
மேலும் பிரதேச செயலகங்களின் செயற்பாடுகளின் வினைத்திறன் தொடர்பிலும் பிரதேசங்களின் அபிவிருத்திக்காக செயற்படுத்தப்பட்டு வருகின்ற செயற்திட்டங்கள் தொடர்பிலும் மக்கள் எதிர்பார்த்துள்ள தேவைகள் குறித்தும் மாவட்ட பிரதேச செயலாளர்களுடனும் கலந்துரையாடியிருந்தனர்.
