புத்தூர் ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாள் ஆலயத்தில் ஆன்மீக நூலகம் அங்குரார்ப்பணம்!
புத்தூர் ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாள் ஆலயத்தில் ஆன்மீக நூலகம் அங்குரார்ப்பணம்!
மாணவர்களை ஆன்மீக நெறியில் வழிப்படுத்தும் நோக்கில் புத்தூர் மணற்பகுதி ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாள் ஆலயத்தில் ஆன்மீக நூலகம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (10) அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.
ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாள் ஆலயத்தின் பூங்காவனத் திருவிழாவான நேற்றைய தினம் இந்நிகழ்வு இடம்பெற்றது. இவ்வாலயத்தில் அறநெறி வகுப்புக்கள் இடம்பெற்றுவரும் நிலையில் அதன் அடுத்த கட்டத்தின் ஓர் அங்கமாக ஆன்மீக நூலக அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெற்றது.
ஆலய பரிபாலன சபைத் தலைவர் அ.பரஞ்சோதி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கோப்பாய் ஆசிரியர் கலாசலையின் முதல்வர் செந்தமிழ் சொல்லருவி ச.லலீசன் அவர்கள் கலந்துகொண்டு நூலகத்தினை திறந்துவைத்தார்.
இந்நிகழ்வின்போது ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் ஆலய அறநெறி மாணவர்களின் "கலையமுதம்" நிகழ்வும் விழாவினை அலங்கரித்தன. இவ் அங்குரார்ப்பண நிகழ்வில் ஆலய குருக்கள் ,பரிபாலன சபையினர் அம்பாளின் அடியார்கள் கலந்துகொ
ண்டனர்.