பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின மாதாந்த அமர்வு இன்று காலை 10:00. மணியளவில் உப தவிசாளர் சிவகுரு செல்வராசா தலமையில் இடம்பெற்றது....!
பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின மாதாந்த அமர்வு இன்று காலை 10:00. மணியளவில் உப தவிசாளர் சிவகுரு செல்வராசா தலமையில் இடம்பெற்றது....!
பச்சிளைப்பள்ளி பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்றய தினம் திட்டமிட்ட நிலையில் தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் சுகவீனம் காரணத்தால் வருகை தராத நிலையில் உப தவிசாளர் தலைமையில் சிறு நேரம் அக வணக்கத்துடன் ஆரம்பமானது
அத்துடன் சபையால் வழங்கப்படும் விசேட அனுமதி மற்றும் அனுமதி தொடர்பாக கலந்துரையாட பட்டு அனுமதிகளும் வழங்கப்பட்டது
மற்றும் பச்சிளைப்பள்ளி பிரதேச சபைக்கு உட்பட்ட பயண்படுத்தப்படாத நிலங்களுக்கு 2 வீத வரி அறவிடுவது தொடர்பாக தீர்மானம் எடுக்க பட்டதுடன் அதனை மக்களுக்கு ஒலி பெருக்கி மூலம் அறிவித்து உடனடியாக செயற்படுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன்
பின் பளை பொதுச் சந்தையில் காணப்படும் இடிபாட்டு கட்களை தேவையின் நிமித்தம் காணப்படும் வீதிகள் மற்றும் தேவையில் காணப்படும் இடங்களை நேரடியாக சென்று பார்வையிட்டு அவ்விடங்களுக்கு வழங்குவது தொடர்பாக தீர்மானம் எடுக்கப்பட்டது டன்
வீதி விளக்குகள் திருத்தம் மற்றும் புதிதாக அமைப்பது தொடர்பான கூலி தொடர்பாக வாத பிரதிவாதம் இடம்பெற்றதுடன் இறுதியில் திருத்த வேலைக்கு 1000ருபாவும் மற்றும் புதிதாக அமைப்பதற்கு 1050எனவும் தீர்மானம் எடுக்கப்பட்டதுடன்
2018 ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட போர்க்குற்ற விசாரணைக்கு வலுசேர்க்கும் முகமாக செம்மணி விவகாரம் தொடர்பாக சர்வதேச விசாரணை கட்டாயம் வேண்டும் என பிரஜேனை முன் வைக்கப்பட்டதுடன் தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்கள் இதனை சபையில் தீர்மானம் எடுக்க முடியாது என தமது கருத்துக்களை முன் வைத்ததுடனும் தமது பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர் என்பவர்கள் செம்மணியில் அவமாண படுத்த பட்டார்கள் என பல எதிர் கருத்துக்களை சபையில் முன் வைத்ததுடன் பல எதிர்புக்களின் மத்தியில் இவ் வலு சேர்க்கும் விடயத்தை 2018 ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துடன் இனைப்பது தொடர்பாக சபையில் கலந்துரையாடப்பட்டது
இன்றைய பிரதேச சபை அமர்வில் 13 உறுப்பினர்களில் 11உறுப்பினர்கள் மாத்திரமே கலந்துகொண்டிருந்தனர்.