மூளாய் சைவப்பிரகாச மாணவி வரலாற்றுச் சாதனை!
மூளாய் சைவப்பிரகாச மாணவி வரலாற்றுச் சாதனை!
வெளியாகிய க.பொ.த சாதாரண பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் மூளாய் சைவப்பிரகாச வித்தியாலய மாணவி ஒருவர் வரலாற்று சாதனை புரிந்துள்ளார்.
ஜ.நிரோஜா என்ற குறித்த மாணவி பாடசாலை வரலாற்றில் க.பொ.த. (சா/தர) ப் பரீட்சையில் முதல் முறையாக 9A பெற்று சாதனை படைத்துள்ளார்.
9A பெற்று வரலாற்றுச் சாதனை படைத்த மாணவிக்கு அதிபர் திரு பா.பாலசுப்பிரமணியம் அவர்கள் ஊக்குவிப்புத் தொகையாக ஒருதொகை பணப்பரிசில் வழங்கி கௌரவித்தார்.
குறித்த பாடசாலையானது பொருளாதார ரீதியாக நலிவுற்ற மாணவர்களும் கல்வி கற்கும் பாடசாலையாக காணப்படுகிறது.
மேலும், அதே பாடசாலை மாணவர்கள் பெற்ற சிறந்த பெறுபேறுகள் வருமாறு
த.பிரணவி 7ஏ 2பி
பு.தேனுஜன் 6ஏ பி 2சி
செ.ஆதீசன் ஏ 3பி 4சி எஸ்
சி.சியானா ஏ 4பி 3சி எஸ்
ஜீ.கலையரசன்
ஏ 2பி 3சி 2எஸ்