Breaking News

சுன்னாகம் புடவையகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் கோடி கணக்கான பொருட்கள் நாசம்!

 சுன்னாகம் புடவையகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் கோடி கணக்கான பொருட்கள் நாசம்!



நேற்றைய முன்தினம் (19) சுன்னாகம் பகுதியில் உள்ள புடவையகத்தில் இடம்பெற்ற தீ விபத்தில் 1 கோடி 25 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் தீயில் எரிந்து நாசமானதாக தெரிவிக்கப்படுகிறது.


இது குறித்து மேலும் தெரியவருகையில்,


குறித்த கடையில் வியாபாரம் நிறைவடைந்த பின்னர் பணியாளர் ஒருவர் கடையை பூட்டிவிட்டு வீடு சென்றுள்ளார். அங்கு சுவாமி படத்திற்கு ஏற்றிய தீபத்தில் இருந்து தீப்பற்றி கடை எரிந்து நாசமாகியது.


இது குறித்து சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.