Breaking News

பருத்தித்துறை பிரதேச சபையில் மணல் அகழ்வு விவகாரம், கடும் வாதப்பிரதிவாதம்.!


பருத்தித்துறை பிரதேச சபையில் மணல் அகழ்வு விவகாரம், கடும் வாதப்பிரதிவாதம்.!




பருத்தித்துறை பிரதேச சபையின மாதாந்த அமர்வு இன்று காலை 9:00. மணியளவில் தவிசாளர் உதயகுமார் யுகதீஸ் தலமையில் ஆரம்பமானது.


இதில் நல்லூர் முருகன் ஆலயத்திற்கு மணல் பரப்புவதற்கு மணல் ஏற்றுவதற்கு வீதியை பயன்படுத்த தவிசாளரால் தன்னிச்சையாக அனுமதி வழங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சபையில் வாத பிரதிவாதங்கள் நீண்டநேரம் இடம் பெற்றது.


அதனை தொடர்ந்து இனிவரும் காலங்களில் நல்லூர் முருகன் ஆலயத்திற்கு வழங்கப்பட் மணல்மண்ணை மீள பாவிக்க கோருவதுடன் இனிவரும் காலங்களில் வடமராட்சி கிழக்கிலிருந்து மணல்மண் வழங்குவதில்லை என்ற தீர்மானம், 

வடமராட்சி கிழக்கில் அரசால் வர்த்தமான சுவீகரிக்கவிருந்த காணிகளை சுவீகரிக்கக் கூடாது என்று வழங்கு தொடர்ந்து குறித்த வர்த்தமானியை இரத்து செய்வதற்க்காக நீதிமன்றில் வழங்குத்தொடர்ந்து குறித்த காணிகள் சுவீகரிப்பை தடுத்து நிறுத்திய ஜனாதிபதி சட்டத்தரணியும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம் ஏ சுமந்திரன் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கின்ற தீர்மானம், பருவகாலத்தில் வடமராட்சி கிழக்கில் கடற்றொழில் மேற்கொள்வதை தடுத்து நிறுத்துதல், அதி கஸ்ர பிரதேசமாக நாகர்கோவிலிலிருந்து சுண்டிக்குளம் பகுதிவரை அறிவிக்கப்படவேண்டும் என்கின்ற பிரேரணையும், 

நகரசபையால் குடத்தனை பகுதியில் கழிவு கொட்டப்படுவதற்கு அனுமதி வழங்கக் கூடாது என்கினற

தீர்மானம், மருதங்கேணி பொதுச்சந்தையை கட்டிட தொகுதியாக மாற்றுவதென்றும், மீன் சந்தைகளில் விற்பனை வரி அறவிடுவதென்ற தீர்மானமும், குடியிருக்க காணிகள் இல்லாத குடும்பங்களுக்கு காணிகளை வழங்குமாறு கோரும் பிரேரணை, கிராமங்கள் தோறும் சித்த வைத்திய சேவை வழங்குதல் என்ற தீர்மானம், வீதிப் போக்குவரத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் வீட்டிற்கு முன்பாக நாட்டப்பட்ட அழகுபடுத்திக், செடிகள், கொடிகளை அகற்றுதல், மற்றும் வீதிப் போக்குவரத்திற்கு ஆபதஸதாகவுள்ள மின்கம்பங்களை இடம் மாற்றுதல், உட்பட பல்வேறு தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.


இன்றைய அமர்வில் பருத்தித்துறை பிரதேச சபை அமர்வில் உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டிருந்தனர்.