ஜனாதிபதியின் க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத் திட்டத்தின் கீழ் இராணுவத்தினரால் கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணிகள் ..!
ஜனாதிபதியின் க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத் திட்டத்தின் கீழ் இராணுவத்தினரால் கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணிகள் ..!
"ஒரு செழிப்பான தேசம் - அழகான வாழ்க்கை" என்ற ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் எண்ணக்கருவில் உதித்த கிளீன் ஸ்ரீ லங்கா தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், கிழக்கு மாகாணத்தின் மிகப்பெரிய சுற்றுலா தளமான காத்தான்குடி கடற்கரையை சுத்தப்படுத்தும் பணிகள் இன்று காலை சிறப்பாக இடம்பெற்றது.
இந்தச் சிரமதான நிகழ்வு, மட்டக்களப்பு குருக்கள்மடம் இராணுவத்தினரின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. குருக்கள்மடம் இராணுவ முகாம் பொறூப்பதிகாரி மேஜர் ரஞ்சன் பகல்ல தலைமையில் இத்திட்டப் படுத்தும் பணிகள் இடம் பெற்றன.
சிரமதானத்தின் போது கடற்கரைப் பகுதியில் காணப்பட்ட கழிவுப் பொருட்கள் சேகரிக்கப்பட்டு, அதனுடன் தொடர்புடைய முறையான அகற்றும் நடவடிக்கைகள் நகர சபையின் மூலம் மேற்கொள்ளப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்எச்எம்.அஸ்பர்,நகரசபை உறுப்பினர்கள்,சமூகநல அமைப்புக்களின் பிரதிநிதிகள்
உட்பட பலரும் கலந்து கொண்டனர்.