வெள்ளவத்தையில் சிக்கிய வெளிநாட்டு பெண்கள்..!
வெள்ளவத்தையில் சிக்கிய வெளிநாட்டு பெண்கள்..!
வெள்ளவத்தையில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த முறையற்ற விடுதி கொழும்பு தெற்கு பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.
இதன்போது முகாமையாளர் மற்றும் பணியில் ஈடுபட்ட 9 தாய்லாந்து பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உளவாளியாக வெளிநாட்டவர் ஒருவரை அங்கு அனுப்பி பெறப்பட்ட தகலுக்கு அமைய, கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றத்தில் உத்தரவு பெற்று சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
சந்தேக நபரான முகாமையாளர் மற்றும் தாய்லாந்து பெண்கள் வெள்ளவத்தை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.