Breaking News

வட மத்திய மாகாண சபைக்கு செயலாளராக யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண் நியமனம்! 

 வட மத்திய மாகாண சபைக்கு முதலாவது தமிழ் பெண் செயலாளராக யாழ்ப்பாணத்தை சேர்ந்த நிர்வாக சேவை அதிகாரியான சுபாஜினி மதியழகன் தனது கடமைகளை இன்று திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார். 



யாழ்ப்பாணம் - சண்டிலிப்பாய் பிரதேச செயலாளராக கடமையாற்றிய சுபாஜினி நிர்வாக சேவை சிறப்பு தரத்துக்கு பதவி உயர்வு பெற்ற நிலையில் வட மத்திய மாகாண சபைக்கு செயலாளராக நியமிக்கப்பட்டார்.


இவ்வாறு நியமனம் பெற்ற அவருக்கு பல்வேறு தரப்பினரும் தமது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது

.