Breaking News

ஆன்மீக மலரான ஞானச்சுடர் 331ஆவது மலர் வெளியீடும், உதவிகளும்..!

 ஆன்மீக மலரான ஞானச்சுடர் 331ஆவது மலர் வெளியீடும், உதவிகளும்..!

 


யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் மாதாந்தம் வெளியீடு செய்யப்படும் ஆன்மீக மலரான ஞானச்சுடர் 331 வது இதழ் வெளியீடு 

சந்நிதிதான் ஆச்சிரம முதல்வர் சாதனைத் தமிழன் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் அவர்களின் தலைமையில் சந்நிதியான் ஆச்சிரமத்தில் பஞ்சபுராண ஓதுதலுடன் ஆரம்பமானது. இதில் மலர் வெளியீட்டுரையினை விரிவுரையாளர் செல்வி தயாளினி குமாரசாமி அவர்களும்,

மதிப்பீட்டுரையினை சைவப் புலவரும் ஆசிரியையுமான 

திருமதி சசிலேகா ஜெயராஜன் அவர்களும் நிகழ்த்தினர். அதனைத் தொடர்ந்து சிறப்பு பிரதிகள் வழங்கிவைக்கப்பட்டன. 


உதவித் திட்டங்களாக தெல்லிப்பளை யா/யூனியன் கல்லூரியில் உயர்தரம் கற்கும் மாணவிக்கும், கரவெட்டி கிழக்கு பகுதியை சேர்ந்த யா/ கட்டைவேலி யார்க்கரு விநாயகர் வித்தியாலயத்தில் தரம் 08 இல் கல்வி கற்கும் மாணவி, முள்ளியவளை, கேப்பாபிலவு குடியிருப்பை சேர்ந்த சூரி முன்பள்ளியில் கல்வி கற்பிக்கும் ஆசிரியைக்கு ஆகியோருக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கிவைக்கப்பட்டன.


இந்நிகழ்வில் சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவை நிர்வாகிகள், உறுப்பினர்கள், சந்நிதியான் ஆச்சிரம தொண்டர்கள், அடியவர்கள் என பலரும் கபந்துகொண்டு சிறப்பித்தனர்.