மானிப்பாய் பிரதேச சபையின் அறிக்கையில் பிழை - பல உறுப்பினர்கள் குற்றச்சாட்டு!
மானிப்பாய் பிரதேச சபையின் அறிக்கையில் பிழை - பல உறுப்பினர்கள் குற்றச்சாட்டு!
மானிப்பாய் பிரதேச சபையின் மாதாந்த அமர்வானது இன்றையதினம் தவிசாளர் திரு.ஜெசீதன் தலைமையில் ஆரம்பமானது.
இதன்போது கடந்த கூட்ட அறிக்கையானது சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. இதன்போது குறித்த கூட்ட அறிக்கையில் கடந்த காலங்களை விட பல தவறுகள் உள்ளதாக பல உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.
எனவே குறித்த அறிக்கையை தயாரிப்பதற்கு மேலதிக உத்தியோகத்தர்கள் தேவை ஏற்படின் அவர்களை நியமிக்குமாறு உறுப்பினர் அச்சுதன் கோரிக்கை முன்வைத்தார்.
மேலும், சபை கூட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னரே அறிக்கையை வழங்கினால் அதனை வாசித்துவிட்டு திருத்தங்கள் குறித்து கருத்துக்கள் முன்வைப்பதன்மூலம் சபை அமர்வின்போது திட்டமிடப்பட்டுள்ள ஏனைய விடயங்களுக்கான நேரத்தில் பாதிப்பு ஏறாபடாது என உறுப்பினர் திரு.பகீரதன் தெரிவித்
துள்ளார்.