குடத்தனையில் சரமாரியான வாள்வெட்டு, ஒருவர் படுகாயம்..!
குடத்தனையில் சரமாரியான வாள்வெட்டு, ஒருவர் படுகாயம்..!
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனை கிழக்கு பகுதியில் வாழ்வெட்டுச் சம்பவம் ஒன்று இன்று காலை 6:30 மணியளவில் இடம் பெற்றுள்ளது.
நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போது மூவர் மீது வாள்வெட்டு சம்பவத்தை மேற்கொண்டவர்மீதே இன்று காலை 6:30 மணியளவில் வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காயமடைந்தவரை 1990 நோயாளர் காவு வண்டி மூலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.
இன்றைய தினம் வாள்வெட்டுக்கு உள்ளான நபர் பல்வேறு குற்ற வழக்குகளில் சம்மந்தப்பட்டிருந்த சந்தேக நபரென்றும் அவர் பல்வேறு வழக்குகளில் பிணையில் வெளியே வந்திருந்தும் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளதெகவும் மருதங்கேணி போலீஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன