Breaking News

குடிநீர் வழங்கப்படாத கருத்தரங்கு!

 குடிநீர் வழங்கப்படாத கருத்தரங்கு!



ஏற்கனவே வடக்கு மாகாணம் முழுவதும் நடாத்தப்பட்ட தொண்டமானாறு வெளிக்கள நிலைய பரீட்சைகள் தடைசெய்யப்பட்ட நிலையில் புதிய ஒரு அமைப்பின் ஊடாக பரீட்சை, கருத்தரங்கு  முல்லைத்தீவு வலயக்கல்விப் பணிப்பாளரால் ஆரம்பிக்கப்பட்டது.


இங்கு கருத்தரங்குக்கு வரும் மாணவர்களுக்கு குடிநீர் வசதி கூட இருக்காதாம். வரும்போது கொண்டு வருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


இதே போன்று ஏற்கனவே விசுவநாதர் நிதியம் ஊடாக முல்லைத்தீவில் சில முறைகேடுகள் இடம்பெற்று குறித்த நிதியத்தை உடனடியாக தடைசெய்ய மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், மற்றும் மாகாண கல்வி பணிப்பாளர் அவர்கள் உத்தரவு பிறப்பித்து இருந்த போதிலும் இன்றுவரை குறித்த நிதிய செயற்பாடுகள் விசுவமடு பாடசாலை ஒன்றில் அதிபரின் துணையோடும் முல்லைத்தீவு வலயக்கல்விப் பணிப்பாளர் தமிழ்மாறனின் ஆசியுடனும் இயங்கிய வண்ணமே உள்ளது என்ற தகவலும் வெளியாகியுள்ளது.