Breaking News

சண்டிலிப்பாய் ஞானவைரவர் சனசமூக நிலையத்தின் 17வது ஆண்டுவிழா!

 சண்டிலிப்பாய் ஞானவைரவர் சனசமூக நிலையத்தின் 17வது ஆண்டுவிழா!





சண்டிலிப்பாய் வடக்கு உலாக்காவளை ஞானவைரவர் சனசமூக நிலையத்தின் 17வது ஆண்டுவிழா நிகழ்வானது நேற்றையதினம் வெகு சிறப்பாக நடைபெற்றது.


நிகழ்வின் ஆரம்பத்தில் விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டு, மங்கல விளக்கேற்றி வைக்கப்பட்டு, இறைவணக்கம் இடம்பெற்றது.


அதனைத் தொடர்ந்து வரவேற்பு நடனம், வரவேற்புரை, தலைமையுரை, கலை நிகழ்வுகள், விருந்தினர்களின் உரைகள் என்பன இடம்பெற்றன.


பின்னர் குறித்த கிராமத்தில் பல்வேறு வகையில் சாதனை புரிந்தவர்களுக்கான கௌரவிப்புகள் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவடைந்தது.


சனசமூக நிலையத்தின் தலைவர் செ.ஐங்கரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், விருந்தினர்கள், கிராம மக்கள் என பலரும் கலந்

துகொண்டனர்.