சிறப்பாக இடம் பெற்ற செம்பியன் பற்று அ.த.க பாடசாலை விளையாட்டு போட்டி..!
சிறப்பாக இடம் பெற்ற செம்பியன் பற்று அ.த.க பாடசாலை விளையாட்டு போட்டி..!
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று அ.த.க பாடசாலை வருடாந்த இல்ல மெய் வல்லுநர் விளையாட்டு போட்டி இன்று சனிக்கிழமை பிற்பகல் 2:00 மணியளவில் பாடசாலை அதிபர் திரு சுப்பிரமணியம் கணேஷ்வரன் தலைமையில் பாடசாலை மைதானத்தில் ஆரம்பமானது
இதில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் மலர் மாலை அணிவிக்கப்பட்டு பாண்ட் வத்திய இசை முழங்க விளையாட்டு மைதானம் வரை அழைத்துவரப்பட்டு அங்கு மங்கல விளக்கு ஏற்றப்பட்டு, தேசியக்கொடி பாடசாலை கொடி, இல்லங்களின் கொடிகள் ஏற்றப்பட்டன. அதனைத் தொடர்ந்து விளையாட்டு போட்டியினை சம்பிரதாயபூர்வமாக நிகழ்வின் பிரதம விருந்தினர் ஆரம்பித்து வைக்க விளையாட்டு போட்டிகள் ஆரம்பமாகின.
விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பதக்கங்கள், சான்றிதழ்கள், பரிசில்கள் என்பவற்றை நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட முகாமைத்துவ பிரதி கல்வி பணிப்பாளர் வடமராட்சி கல்வி வலயம் நடராஜா காண்டீபன் அவர்களும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட செல்வராசா இராமச்சந்திரன் மருதங்கேணி கோட்டக்கல்வி பணிப்பாளர் மருதங்கேணி அவர்களும் உட்பட நிகழ்வில் கலந்து கொண்ட கௌரவ விருந்தினர்களும் வழங்கி வைத்தனர்
இவ் விளையாட்டு போட்டியில் மாணவர்களின் இசையும் அசையும் சிறு ஓட்டங்கள் அஞ்சல் ஓட்டங்கள் பழய மாணவர்கள் விளையாட்டு என பல் வகை விளையாட்டுகள் இடம் பெற்றதுடன் அனைத்து விளையாட்டுகளிலும் மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் பங்கேற்றதை கவனிக்க கூடிய வாறு இருந்தது
மற்றும் இவ் விளையாட்டு போட்டியில் பாடசாலை மாணவர்கள் அயல் பாடசாலை ஆசிரியர்கள் மத குருமார்கள் பழய மாணவர்கள் மாணவர்களின் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்


