மிகவும் சிறப்பாக இடம்பெற்ற சென் பிலிப் நேரிஸ் சிறுவர்கள் முதல் நன்மை திருப்பலி
மிகவும் சிறப்பாக இடம்பெற்ற சென் பிலிப் நேரிஸ் சிறுவர்கள் முதல் நன்மை திருப்பலி
யாழ் வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று வடக்கு சென் பிலிப் நேரிஸ் ஆலய வருடாந்த முதல் நன்மை திருப்பலி மற்றும் நிகழ்வுகள் நேற்று (10) சனிக்கிழமை ஆலயத்தில் ஆரம்பமானது
இந்நிகழ்வானது சென் பிலிப் நேரிஸ் ஆலயத்தில் வனபிதா j.ரெஜிநோல்ட் தலைமையில் காலை 6:30 மணியளவில் திருப்பலியில் ஆரம்பமானது
இச் திருப்பலியில் செம்பியன் பற்று பங்கு தந்தை ஜஸ்டின் ஆதர் மற்றும் அருட்சகோதரிகள் பங்கு மக்கள் என பலரும் கலந்து கொண்டதோடு முதல் நன்மை பெற்ற சிறுவர்களுக்கு கல்வி கற்பித்து கொடுத்த மறை ஆசிரியர்களான ஆசிரியர் சாந்தா மற்றும் அனற்ஜெனிலா என்போர் கலந்து கொண்டனர்
இவ் ஆன்மீக நிகழ்வானது வருடம் தோறும் இடம்பெறும் ஆலய திருவிழாவினை முன்னிட்டு வரும் முதல் சனிக்கிழமை இடம் பெரும் கத்தோலிக்க திருச்சபையின் ஓர் ஆன்மீக நிகழ்வாகும்