Breaking News

முதலாவது வாக்கெடுப்பின் பின் கரும் புகை

 முதலாவது வாக்கெடுப்பின்

பின் கரும் புகை



வத்திகானில் நேற்று (07) இடம் பெற்ற

பாப்பரசர் தெரிவு சாத்தியம் ஆகவில்லை என்பதால் புனித பீட்டர்ஸ்

ஆலயத்தின் புகைக்கூண்டில் இருந்து கரும் புகை வெளியாகியுள்ளது.


உலகின் மிக முக்கிய பேசுபொருள்

ஆகியுள்ள பாப்பரசர்

தெரிவின் இரண்டாவது தெரிவில் உலகின் கார்டினல்கள் இன்று

மீண்டும் வாக்களிக்கவுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அடுத்த போப்பைத் தேர்ந்தெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள 133 கார்டினல்கள் இப்போது சிஸ்டைன் தேவாலயத்திற்குள் மாநாட்டிற்காக அடைக்கப்பட்டுள்ளனர். தேவாலயம் பூட்டப்படுவதற்கு முன்பு ரகசிய உறுதிமொழி எடுத்தவர்களில் கொழும்பு பேராயர் கார்டினல் மால்கம் ரஞ்சித்தும் ஒருவர்.