Breaking News

பரந்தன் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணெய் கொள்வனவு செய்த டிப்பர் வாகணத்தை கண்டும் காணாமலும் சென்ற போக்குவரத்து பொலிஸ்


பரந்தன் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணெய் கொள்வனவு செய்த டிப்பர் வாகணத்தை கண்டும் காணாமலும் சென்ற போக்குவரத்து பொலிஸ் 



இன்றய தினம் (8) பிற்பகல் 4:30 மணியளவில் பரந்தன் சந்தியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் டிப்பர் வாகனம் ஒன்று மண்ணெண்ணெய் கொள்வனவு செய்யும் போது போக்குவரத்து பொலிசார் அதனை கண்டும் காணாமலும் போன சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது 


இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது 


மூன்று டிசம்பர் வாகனங்கள் எரிபொருள் நிரப்பு நிலையத்தின் முன்பாக மண்ணெண்ணெய் கொள்வனவு செய்தனர் அப்போது பரந்தன் சந்தியில் கடமையில் ஈடுபட்டுக்கொண்ட போக்குவரத்து பொலிசார் அதனை அவதானித்த போதும் எந்த வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை 


ஒரு டிப்பர் முழுமையாக மண்ணெண்ணெய் கொள்வனவு செய்த பின் அந்த இடத்திற்கு வந்த பொலிசார் மற்றய இரண்டு டிப்பர்களையும் மண்ணெண்ணெய் கொள்வனவு செய்யாத படி அனுப்பியள்ளனர் 


குறிப்பாக எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணெய்யினை டிப்பர் வாகனங்கள் கொள்வனவு செய்வது முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது என்பதுடன் டிப்பர் வாகனங்கள் மண்ணெண்ணெய்யில் ஓடினால் தண்டனைக்குரிய குற்றமாகும் 



மண்ணெண்ணெய் பாவனையானது விவசாய மற்றும் மீன்பிடி நடவெடிக்கைக்காக பயன்படுத்தக்கூடிய எரிபொருள் என்பதும் குறிப்பிடத்தக்கது