போரட்டத்தில் கலந்து கொண்ட காரணத்தால் இராணுவ புலனாய்வு துறையினரால் தேடப்படும் இளைஞர்....!
போரட்டத்தில் கலந்து கொண்ட காரணத்தால் இராணுவ புலனாய்வு துறையினரால் தேடப்படும் இளைஞர்....!
கடந்த சில மாதங்களுக்கு முன் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை தமிழ் மக்களின் பாரியளவிலான பங்களிப்புடன் மிக பிரமாண்டமாக கட்சி பேதமின்றி நட பட்டத்துடன் கூடிய மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம் பெற்றது
அதனை தொடர்ந்து குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் அரசியல் பிரதிநிதிகள் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் என்போரை குற்ற புலனாய்வு துறையினரால் மற்றும் இராணுவ புலனாய்வு துறையினரால் தொடர்ந்து தேடப்பட்டு வந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளது
அதன் தொடர்ச்சியாக ஜனநாயக போராளிகள் கட்சியின் இனையத்தள பாவனையாளரும் கட்சியின் முக்கியஸ்தருமான செம்பியன் பற்று வடக்கு மாமுனை பகுதியில் வசிக்கும் இளைஞரான Nadarajah mithushan என்பவரை அவரின் வீடு சென்று விசாரித்து உள்ளனர்
விசாரணை மேற்கொண்ட நபர்கள் தம்மை இராணுவ புலனாய்வு துறையினர் என அடையாள படுத்தி குறித்த இளைஞரின் குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்
இதனால் அச்சம் அடைந்த குடும்பத்தினர் தமது மகனை தமது வீட்டுக்கு அழைக்க பயத்தில் வெளி இடத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்
இவ்வாறான செயற்பாடுகள் தற்கால சமூகத்தில் அதிகம் நடப்பதல் வடக்கு கிழக்கு பகுதிகளில் அச்சமான சூழ்நிலை காணப்பட்டுள்ளது
