வடமராட்சியில் சிக்கிய பெருந்தொகையான ஈரமான நிலையில் கஞ்சா கட்டைக்காட்டை சேர்ந்த சந்தேக நபரும் கடல் படையினரால் கைது
வடமராட்சியில் சிக்கிய பெருந்தொகையான ஈரமான நிலையில் கஞ்சா கட்டைக்காட்டை சேர்ந்த சந்தேக நபரும் கடல் படையினரால் கைது
யாழ் வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் பெருந்தொகையான கஞ்சா கடற்படையினரால் மீட்கப்பட்டது
வெற்றிலைக்கேணி கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் படி இன்றைய தினம் (8)காலை ஒரு சுற்றிவளைப்பினை மேற்கொண்டனர் சுற்றிவளைப்பில் பெருந் தொகையான கேரளா கஞ்சா 8உரப்பைபொதிகளில் ஈரமான நிலையில் கடலில் இருந்து கடலில் வீசப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது
பின்னர் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 50வயது நிறைந்த கட்டைக்காட்டினை சேர்ந்த சந்தேக நபரையும் கடல் படையினர் கைது செய்துள்ளனர் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சில மாதங்களுக்கு முன்பு ஒரு தொகை போதை பொருளுடன் கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறைத் தண்டனையின் பின் விடுதலை செய்யப்பட்டவர் என்று கடற்படை தெரிவித்துள்ளனர்
மீட்கப்பட்ட கஞ்சா பொதிகள் மற்றும் படகு இயந்திரம் மற்றும் சந்தேக நபரையும் மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் கடல் படையினர் ஒப்படைத்துள்ளனர்