யாழ் வடமராட்சி நெல்லியடி லயன்ஸ் கிளப்பால் மாமுனை அ.த.க பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கிவைப்பு
யாழ் வடமராட்சி நெல்லியடி லயன்ஸ் கிளப்பால் மாமுனை அ.த.க பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கிவைப்பு
யாழ் வடமராட்சி நெல்லியடி லயன்ஸ் கிளப்பின் ஏற்பாட்டில் யா/மாமுனை அ.த.க பாடசாலைக்கு லயன்ஸ் கிளப்பின் வடமராட்சி கிழக்கு பிராந்திய தலைவரின் வருகை நேற்று(26) இடம்பெற்றது
முற்பகல் 10.30 மணியளவில் நெல்லியடி வட்டார லயன்ஸ் கிளப் தலைவர் க.யோகேந்திரன் தலைமையில் மாமுனை அ.த.க பாடசாலையில் நிகழ்வு ஆரம்பமானது
லயன்ஸ் கிளப்பின் வடமராட்சி கிழக்கு பிராந்திய தலைவர் சமாதான நீதிவான்,வே.தவச்செல்வன் அவர்கள் கெளரவ விருந்தினராக கலந்து கொண்டார்
குறித்த நிகழ்வில் நெல்லியடி லயன்ஸ் கிளப்பால் மாமுனை அ.த.க பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டதுடன் மரக்கன்றுகளும் வழங்கிவைக்கப்பட்டன
இந்நிகழ்வில் மாமுனை அ.த.க பாடசாலை அதிபர்,நெல்லியடி லயன்ஸ் கிளப் அதிகாரிகள்,ஆசிரியர்கள்,மாணவர்கள்,பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்