இலங்கையின் சனத்தொகை வளர்ச்சி வீதம் வரலாற்றில் முதற் தடவையாக இரண்டாயிரம் பேருக்கு ஒருவர் என்ற அடிப்படையில் வீழ்ச்சி அடைந்து செல்கிறது.
இலங்கையின் சனத்தொகை வளர்ச்சி வீதம் வரலாற்றில் முதற் தடவையாக இரண்டாயிரம் பேருக்கு ஒருவர் என்ற அடிப்படையில் வீழ்ச்சி அடைந்து செல்கிறது.
நாட்டின் மொத்த சனத்தொகை 21,763,170 தொகை மக்கள் ஆகும்.
அதிகமான மக்கள் வாழும் மாகாணம் மேல் மாகாணம் ஆகும். இங்கு மொத்த சனத்தொகையில் 28.1% ஆன மக்கள் வசிக்கின்றனர்.
மிகக் குறைவான மக்கள் வாழும் மாகாணம் வடமாகாணம் ஆகும். இங்கு மொத்த சனத்தொகையில் 5.3% ஆன மக்கள் மட்டுமே வசிக்கின்றனர்.
மாவட்டரீதியாக அதிகூடுதலான சனத்தொகை கொண்ட மாவட்டமாகிய கம்பஹா மாவட்டத்தில் 2,433,685 மக்கள் வசிக்கின்றனர். இது மொத்த சனத்தொகையில் 11.2% ஆகும்.
கொழும்பு மாவட்டத்தில் 2,374,461 மக்கள் வசிக்கின்றனர். இது மொத்த சனத்தொகையில் 10.9% ஆகும்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் 594,333 மக்கள் வசிக்கின்றனர். இது மொத்த சனத்தொகையில் 2.7% ஆகும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 595,435 மக்கள் வசிக்கின்றனர். இது மொத்த சனத்தொகையில் 2.7% ஆகும்.
அம்பாரை மாவட்டத்தில் 744,150 மக்கள் வசிக்கின்றனர். இது மொத்த சனத்தொகையில் 3.4% ஆகும்.
திருகோணமலை மாவட்டத்தில் 442,441 மக்கள் வசிக்கின்றனர். இது மொத்த சனத்தொகையில் 2% ஆகும்.
வடமாகாணத்தில் 1,149,150 மக்கள் வசிக்கின்றனர். இது மொத்த சனத்தொகையில் 5.% ஆகும்.
கிழக்கு மாகாணத்தில் 1,782,050 மக்கள் வசிக்கின்றனர். இது மொத்த சனத்தொகையில் 8.2% ஆகும்.