Breaking News

சந்நிதியான் ஆச்சிரமம் பிரமணாலங்குளம் கிராமத்திற்க்கு 1,938,000 ரூபா நிதியில் அறநெறிப் பாடசாலை..!


சந்நிதியான் ஆச்சிரமம்  பிரமணாலங்குளம் கிராமத்திற்க்கு 1,938,000 ரூபா நிதியில் அறநெறிப்  பாடசாலை..!




யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு  சந்நிதியான் ஆச்சிரமத்தால்  வவுனியா  பிரமணாலங்குளம், வடகாடு  ஶ்ரீ முத்துமாரியம்மன் அறநெறிப் பாடசாலைக்காக ரூபா 19 இலட்சத்து 50 ஆயிரம் செலவில்  புதிய கட்டிடமொன்று அமைத்து கொடுத்துள்ளது. 


குறித்த கட்டிட கையளிப்பு நகழ்வு இன்றைய தினம் பிரமணாளங்குளம் அறநெறி பாடசாலை ஆசிரியை தலமையில் இடம் பெற்றது.




இதில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் வீதியிலிருந்து மலர் மாலை அணிவிக்கப்பட்டு விழா மண்டபம் வரை அழைத்துச் செல்லப்பட்டு அங்கு மங்கள சுடர்கள் ஏற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின.

மங்கல சுடர்களை சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் சாதனைத் தமிழன் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள், வெங்கல செட்டிக்குளம் பிரதேச இந்து கலாசார உத்தியோகத்தர் சிவகஜன், சந்நிதியான் செட்டிக்குளம் பிரதேச செயலக உத்தியோகத்தர் சுஜேந்திரன், கிராம சேவையாளர் திருமதி சோபனா உட்பட பலரும் ஏற்றி வைத்ததனை தொடர்ந்து சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகளாள்  அறநெறி கட்டிடம் திறந்துவைக்கப்பட்டதுடன், கல்வெட்டும் திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது.


இதில் கருத்துரைகளை வெங்கல செட்டிக்குளம் கலாசார உத்தியோகத்தர் தி.சிவகஜன், வெங்கல செட்டிக்குள உத்தியோகத்தர் சுஜேந்திரன், 

கிராம சேவையாளர் திருமதி சோபனா, நிகழ்வின் பிரதம விருந்தினர் மோகனதாஸ் சுவாமிகள், உட்பட பலரும் நிகழ்த்தினர். மாணவர்களின் பல்வேறு கலை நிகழதவுகளும் இடம் பெற்றது.


இதில் சந்நிதியான் ஆச்சிரம தொண்டர்கள், வெங்கல செட்டிக்குளம் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராம அபிவிருத்தி சங்க நிர்வாகிகள், 

வடகாடு  ஶ்ரீ முத்துமாரியம்மன் அறநெறிப் பாடசாலை, மாணவர்கள், கிராம மக்கள் பெற்றோர்கள் என பலரும் கபந்துகொண்டிருந்தனர்.



இதேவேளை பெரியதம்பனை ஶ்ரீ வரசித்தி விநாயகர் ஆலய அறநெறி மாணவர்களுக்கான சீருடைத் துணிகளும் சந்நிதியான் ஆச்சிரமத்தால்  வழங்கிவைக்கப்பட்டன.