ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பருத்தித்துறை பிரதேச சபை வேட்பாளர்களின் கலந்துரையாடல் இன்று இடம்பெற்றது
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பருத்தித்துறை பிரதேச சபை வேட்பாளர்களின் கலந்துரையாடல் இன்று இடம்பெற்றது
இன்று (28) மாலை 5மணியளவில் பருத்தித்துறை பகுதியில் வேட்பாளர்களுக்கான கலந்துரையாடலானது ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் சி. வேந்தன் அவர்களின் தலைமையில் ஆரம்பமாகி பிரதேசசபை வேட்பாளர்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது
இக்கூட்டத்தில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இணைத்தலைவர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன், பருத்தித்துறை பிரதேச சபையின் வேட்பாளர்கள் கலந்துகொண்டிருந்தனர்.